சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜனதா திட்டம் சித்தராமையா பேட்டி


சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜனதா திட்டம் சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 17 Dec 2017 4:54 AM IST (Updated: 17 Dec 2017 4:54 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜனதாவினர் திட்டமிடுகிறார்கள் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

முதல்–மந்திரி சித்தராமையா ஒருநாள் சுற்றுப்பயணமாக நேற்று கலபுரகிக்கு சென்றார். கலபுரகி மாவட்டம் அப்சல்புராவில் முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதாக எடியூரப்பா கூறி இருக்கிறார். அவர் சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள். எடியூரப்பா மக்களை ஏமாற்ற நினைக்கிறார். சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜனதாவினர் திட்டமிடுகிறார்கள். மக்களிடையே பிரிவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களது எண்ணம் பலிக்காது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story