திருவிசநல்லூர் பிரத்தியங்கிராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்


திருவிசநல்லூர் பிரத்தியங்கிராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்
x
தினத்தந்தி 17 Dec 2017 10:30 PM GMT (Updated: 17 Dec 2017 8:14 PM GMT)

திருவிசநல்லூர் பிரத்தியங்கிராதேவி கோவிலில் நிகும்பலா யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பிரத்தியங்கிராதேவி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். ஆகவே இக்கோவிலை பிரத்தியங்கிராதேவி கோவில் என்றே அழைக்கிறார்கள். கண்திருஷ்டி, தீ வினைகள் நீங்க பிரத்தியங்கிரா தேவியை பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். இங்கு நேற்று அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடைபெற்றது. இதில் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல், பட்டுப்புடவைகள் மற்றும் பல வகையான பழங்கள், பூக்கள் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் அர்ச்சகர் கணேஷ்குமார் சிவாச்சாரியார் உள்பட 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாக பூஜைகளை செய்தனர்.

திரளான பக்தர்கள்

யாகத்தை தொடர்ந்து பிரத்தியங்கிராதேவி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த பிரத்தியங்கிரா தேவியை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கணேஷ்குமார் மற்றும் திருவிசநல்லூர் கிராம மக்கள் செய்து இருந்தனர். 

Next Story