தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ கிராப் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
தூத்துக்குடியில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கிராப் கூட்டமைப்பினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு(ஜாக்டோ-ஜியோ கிராப்) சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்தது. போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் ஆறுமுகநயினார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவன், தமிழக தமிழாசிரியர் கழகம் சுந்தர்சிங் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு மேல்நிலை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அந்தோணி எட்வர்டு யூஜின், தமிழக ஆசிரியர் கூட்டணி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் இளங்கோவன் கலந்து கொண்டு, உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சுகாதார ஆய்வாளர் சங்கம் சந்திரசேகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
உண்ணாவிரதத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றம் வேண்டும், பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மலையாண்டி, ஆசிரியர் கூட்டணி ராமமூர்த்தி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ராமசுப்பிரமணியன், அரசுத்துறை வாகன ஓட்டுநர் சங்க சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story