புதுவை முதலியார்பேட்டையில் ஆண் சிசு பிணத்தை கடித்து குதறிய நாய்கள்


புதுவை முதலியார்பேட்டையில் ஆண் சிசு பிணத்தை கடித்து குதறிய நாய்கள்
x
தினத்தந்தி 18 Dec 2017 4:52 AM IST (Updated: 18 Dec 2017 4:52 AM IST)
t-max-icont-min-icon

புதுவை முதலியார்பேட்டை வெள்ளாழ வீதியில் வழக்கத்துக்கு மாறாக நாய்கள் கூட்டமாக குரைத்தபடி இருந்தன. அங்கு துணியில் சுற்றப்பட்டு கிடந்த எதையோ கடித்து குதறியபடி இருந்தன.

புதுச்சேரி,

இதனால் சந்தேகமடைந்து அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் சிலர் அது என்னவென்று அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த நாய்கள் கடித்து குதறியது பிறந்து சுமார் 4 நாட்களே ஆன நிலையில் இறந்து கிடந்த ஆண் சிசுவின் உடலைத் தான் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த நாய்களை அங்கிருந்து துரத்தி விட்டனர். ஆண் சிசு ஒன்று கிடப்பது குறித்து முதலியார்பேட்டை போலீசுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அங்கு கிடந்த சிசுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

பிறந்து சில நாட்களே ஆன அந்த சிசுவை தெருவில் வீசி சென்ற யார்? என்பது தெரியவில்லை. கள்ளக்காதலில் பிறந்ததால் சிசு தெருவில் வீசப்பட்டதா? என்பது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story