வேலூரில் ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்


வேலூரில் ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2017 12:06 AM GMT (Updated: 18 Dec 2017 12:06 AM GMT)

வேலூரில் ஜாக்டோ– ஜியோ கூட்டமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

வேலூர்,

ஜாக்டோ– ஜியோ மற்றும் கிராப் கூட்டமைப்புகள் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வேலூரில் அண்ணாகலையரங்கம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் அருணகிரிநாதன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் சுதாகரன், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தமிழ்நாடு தொடக்க, நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.சேகர் உணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் ரா.சண்முகராஜன், தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் விக்டர்பால்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

1–4–2003 முதல் பணிநியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு நிலுவைத்தொகையினை 1–1–2018 முதல் பணப்பயனாக வழங்கவேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

முடிவில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோட்டி நன்றி கூறினார்.


Next Story