கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கிராப் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்


கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கிராப் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 19 Dec 2017 4:00 AM IST (Updated: 19 Dec 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கிராப் கூட்டமைப்பினர் சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 6–வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்து, திருத்திய ஊதிய மாற்றம் செயல்படுத்திட வேண்டும், ஊதியக்குழு நிலுவைத் தொகையை 1.1.2016 முதல் பணப்பயனாக வழங்க வேண்டும், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கிராப் கூட்டமைப்பினர் சிவகங்கை அரண்மனைவாசலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதத்திற்கு தமிழ்நாடு தமிழாசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் நாகேந்திரன் தலைமை தாங்கினார். ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜேசுராஜ் வரவேற்றார். அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கருப்பையா, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் அருள்ராஜ், பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் ஜேம்ஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தை அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜோசப் சேவியர் நிறைவுரையாற்றினார். உண்ணாவிரதத்தில் நிர்வாகிகள் கோவிந்தராஜ், மனோகர், பாண்டியராஜன், சுரேஷ்குமார், ரமேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தமிழாசிரியர் கழக மாவட்டச் செயலாளர் ராம்குமார் நன்றி கூறினார்.


Next Story