மூன்றாம் பருவ தேர்வு பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது
மூன்றாம் பருவ தேர்வு பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.
கரூர்,
தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முப்பருவ தேர்வு முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் 2-ம் பருவ தேர்வு தற்போது நடந்து வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது.
வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது. அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் மூன்றாம் பருவ தேர்வுக்கான வகுப்புகள் தொடங்கும்.
பாடப்புத்தகங்கள்
இந்த நிலையில் மூன்றாம் பருவ தேர்வுக்கான பாடப்புத்தகங்கள் சென்னையில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கரூர் மாவட்டத்திற்கு 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் வந்துள்ளன.
கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகளுக்கு வேன் மூலம் பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் உத்தரவின் பேரில் கல்வித்துறை ஊழியர்கள் இந்த புத்தகம் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாடப்புத்தகங்கள் அனைத்தையும் தேர்வு விடுமுறைக்குள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்கள் அனைவரது கையிலும் புத்தகம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story