அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2017 10:30 PM GMT (Updated: 18 Dec 2017 9:19 PM GMT)

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,

அரியலூர் அருகேயுள்ள கல்லக்குடி கிராம மக்கள் தங்களது கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் கல்லக்குடி கிளை துணை செயலாளர் பெரியசாமி, பொருளாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கை குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். 

Next Story