தினக்கூலியை உயர்த்தி வழங்கக்கோரி நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் கலெக்டரிடம் மனு


தினக்கூலியை உயர்த்தி வழங்கக்கோரி நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 18 Dec 2017 10:45 PM GMT (Updated: 18 Dec 2017 9:19 PM GMT)

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தினக்கூலியை உயர்த்தி வழங்கக்கோரி ஜெயங்கொண்டம் நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லட்சுமிபிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 429 மனுக்கள் கொடுக்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கினார்.

தினக்கூலியை உயர்த்தி வழங்க...

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 2006-ம் ஆண்டு முதல் ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்க்கும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் எனக்கோரி சிலம்பு செல்வி தலைமையில் பெண் பணியாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதேபோல பல்வேறு தரப்பினரும் மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு ஊன்றுகோல் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலாஜி, மாவட்ட வழங்கல் அதிகாரி கதிரேசன், தாசில்தார் முத்துலட்சுமி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story