நரிக்குடி அருகே வாலிபர் குத்திக் கொலை
நரிக்குடி அருகே கண்மாய் கரையில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
நரிக்குடி,
நகரிக்குடி அருகே உள்ளது இருஞ்சிறை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதியில் நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடலில் கத்தியால் குத்தப்பட்டும், கீறியதும் போன்று காணப்பட்டது. இதுகுறித்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் பார்த்து உடனே நரிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து போலீசார் இறந்து கிடந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும், கொலை செய்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக தடயவியல் துறை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலில் கத்தியால் குத்தப்பட்டும், கீறப்பட்டும் இருந்தது. இதனால் முன்விரோதத்தில் யாரோ கொலை செய்து, உடலை கண்மாய் கரையில் வீசி சென்றிருப்பது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.