கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சகோதரர்கள் போலீசார் விசாரணை
புதுக்கோட்டையில் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சகோதரர்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தின் அருகே நேற்று காலை 2 வாலிபர்கள் கழுத்தில் ரத்தக்காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
வாலிபர்கள் 2 பேரின் கழுத்து பகுதி பிளேடால் அறுக்கப்பட்டதற்கான தடயம் இருந்தது. ரத்தம் சொட்ட, சொட்ட மயங்கிய நிலையில் கிடந்த அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கழுத்து அறுப்பட்டு கிடந்த ஒரு வாலிபரின் சட்டை பாக்கெட்டில் இருந்த ஒரு சீட்டை போலீசார் கைப்பற்றினர். அது சென்னையில் உள்ள அரசு மனநல காப்பகத்தின் உள்நோயாளிகள் பிரிவுக்கான சீட்டு ஆகும். அதில் நாகராஜ் என்ற பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்த விவரங்கள் வருமாறு:-
கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த வாலிபர்கள் சென்னையை சேர்ந்த நாகராஜன் (35), தினேஷ்(வயது 33) என்றும் அவர்கள் அண்ணன், தம்பி என்பதும் தெரியவந்தது. அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. அப்பா, அம்மா இல்லை. உறவினர்கள் ஆதரவும் இல்லாததால் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
அவர்கள் சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு ரெயில் மூலம் வந்தனர். பின்னர் பிளேடாலால் கழுத்தை அறுத்துக் கொண்டு ரெயில்வே தண்டவாளம் அருகே விழுந்து கிடந்தனர். இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் உயிர் பிழைத்தனர்.
மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Related Tags :
Next Story