ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்


ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2017 4:15 AM IST (Updated: 20 Dec 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாரூர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, சிவபுண்ணியம், மாவட்ட செயலாளர் செல்வராஜ், கட்சி நிர்வாகி சந்திரசேகரஆசாத் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். உயிரிழந்த மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இடிந்த வீடுகளுக்கும், விவசாய இழப்பிற்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காணாமல் போன மீனவர் மீட்பு பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். காயமடைந்த மீனவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story