தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் தரை தட்டி படகு சேதம்

புதுவை சோலைநகரை சேர்ந்தவர் ஸ்டீபன் விசைப்படகு உரிமையாளர்.
புதுச்சேரி,
புதுவை சோலைநகரை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 38). விசைப்படகு உரிமையாளர். இவரது படகில் சோலைநகரை சேர்ந்த சுதாகர் உள்பட 9 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
கடலில் மீன்பிடித்துவிட்டு அவர்கள் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்துக்கு திரும்பினார்கள். முகத்துவாரத்தில் வந்தபோது கடும் அலையின் சீற்றம் காரணமாக படகு தரை தட்டி நின்றது. இதனால் படகின் அடிப்பகுதி சேதமடைந்தது.
இதைத்தொடர்ந்து படகில் வந்தவர்கள் நீந்தி கரை சேர்ந்து விவரத்தை மற்ற மீனவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் சக மீனவர்கள் மற்றும் பொக்லைன் உதவியுடன் சேதமடைந்த படகினை நேற்று மீனவர்கள் கயிறு கட்டி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்துக்கு இழுத்து வந்தனர்.
Related Tags :
Next Story