ஆயுதங்கள் ஏந்திய போராட்டத்தால் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியாது தலாய் லாமா பேட்டி

ஆயுதங்கள் ஏந்திய போராட்டத்தால் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியாது தலாய் லாமா பேட்டி
x
தினத்தந்தி 19 Dec 2017 9:00 PM GMT (Updated: 2017-12-20T02:22:24+05:30)

புத்த மத தலைவரான தலாய் லாமா தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் மேற்கொண்டு உள்ளார். அந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்து உள்ளார்.

ஹாசன்,

புத்த மத தலைவரான தலாய் லாமா தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் மேற்கொண்டு உள்ளார். அந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்து உள்ளார்.

நேற்று மைசூருவில் உள்ள பைலுகொப்பலுவுக்கு சென்ற அவர், அதற்கு முன்பாக ஹாசன் டவுனில் உள்ள சுற்றுலா விடுதியில் சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

உலக நாடுகளிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் மூலம் என்றும் நிரந்தர தீர்வு காண முடியாது. அதற்கு மாறாக நாட்டு தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி நிரந்தர தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். புத்த மத தர்மங்களை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் அனைவரும் அமைதியாக வாழ முடியும். நான் ஒவ்வொரு முறையும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது இங்குள்ள அரசு எனக்கு வேண்டிய பாதுகாப்பையும், உதவியையும் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story