மும்பையில் ஏ.சி. மின்சார ரெயிலை இயக்க அனுமதி ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் வழங்கினார்
மும்பையில் ஏ.சி. மின்சார ரெயிலை இயக்குவதற்கான அனுமதியை ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் வழங்கி உள்ளார்.
மும்பை,
மும்பையில் ஏ.சி. மின்சார ரெயிலை இயக்குவதற்கான அனுமதியை ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் வழங்கி உள்ளார்.
ஏ.சி. மின்சார ரெயில்மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி. மின்சார ரெயில் கடந்த ஆண்டு மும்பை வந்தடைந்தது.
பல்வேறு காரணங்களால் மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்குவதில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தாமதம் ஆனது.
இந்தநிலையில், 2018 புத்தாண்டு முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்படும் என்று ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் அறிவித்தார்.
பாதுகாப்பு கமிஷனர் அனுமதிபின்னர் கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்தே ஏ.சி. மின்சார ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டது. கிறிஸ்துமஸ் நெருங்கிவிட்ட நிலையில், ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கு ரெயில்வே அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சர்ச்கேட்– தகானு செக்ஷனில் ஏ.சி. மின்சார ரெயிலை இயக்குவதற்கு ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அனுமதி அளித்து உள்ளார்.
ஏ.சி. மின்சார ரெயில் மூலம் சர்ச்கேட்– விரார் தினசரி 8 முதல் 10 சேவைகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.