தண்டவாளத்தில் உடல் துண்டாகி கிடந்த வாலிபர் யார் அவர்? போலீஸ் விசாரணை


தண்டவாளத்தில் உடல் துண்டாகி கிடந்த வாலிபர் யார் அவர்? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 22 Dec 2017 3:45 AM IST (Updated: 22 Dec 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் தண்டவாளத்தில் உடல் துண்டாகி வாலிபர் பிணமாக கிடந்தார். இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஓம்சக்தி நகர் பின்புறம் பாலசுப்பிரமணியர் நகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை 7 மணியளவில் ரெயிலில் அடிபட்டு துண்டாகிய நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது.

அந்த ஆண் பிணத்தின் உடலும், ஒரு கையும் ரெயில் தண்டவாளத்திலும், மற்றொரு கையும், தலையும் தண்டவாளம் அருகில் உள்ள முட்புதரிலும் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

10 மணிக்கு மேல் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் இருந்து தவறி விழுந்து ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story