மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு தொடங்கியது
பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நேற்று தொடங்கியது.
பென்னாகரம்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தர்மபுரி மாவட்ட 22-வது மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தை மாநில குழு உறுப்பினர் ஆனந்தன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பெரும்பாலை பிரிவு ரோட்டில் தொடங்கி பொதுகூட்ட மேடையை வந்தடைந்தது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர்.
இதைத்தொடர்ந்து மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் டெல்லிபாபு, இளம்பரிதி, மாரிமுத்து, ஆறுமுகம், மாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் மத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும், வேளாண்மையை பாதுகாத்திட ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்து நீர்வளத்தை பெருக்கிட சிறப்பு திட்டங்கள் உருவாக்க வேண்டும். தர்மபுரி வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும். ஒகேனக்கல்லில் நீர் மின் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தர்மபுரியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முன்னதாக பாப்பாரப்பட்டியில் இருந்து சுதந்திர போராட்ட தியாகி பஞ்சாட்சரம் நினைவு ஜோதி பயணம் புறப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பகுதி குழு உறுப்பினர் லோகநாதன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சின்னசாமி ஜோதியை எடுத்து கொடுத்தார். இதில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நினைவு ஜோதி பென்னாகரத்தில் நடைபெற்ற மாநாட்டை வந்தடைந்தது. இந்த மாநாடு இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடக்கிறது.

Related Tags :
Next Story