அம்பர்நாத்தில், காணாமல் போன 3 வயது தமிழ் சிறுவன் சாக்கடையில் பிணமாக மீட்பு


அம்பர்நாத்தில், காணாமல் போன 3 வயது தமிழ் சிறுவன் சாக்கடையில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 22 Dec 2017 4:15 AM IST (Updated: 22 Dec 2017 3:09 AM IST)
t-max-icont-min-icon

அம்பர்நாத்தில், காணாமல்போன 3 வயது தமிழ் சிறுவன் அங்குள்ள சாக்கடையில் பிணமாக மீட்கப்பட்டான்.

அம்பர்நாத்,

அம்பர்நாத்தில், காணாமல்போன 3 வயது தமிழ் சிறுவன் அங்குள்ள சாக்கடையில் பிணமாக மீட்கப்பட்டான்.

சிறுவன் மாயம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள குரும்பூரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது35). டிரைவர். இவர் தானே மாவட்டம் அம்பர்நாத் சுவாமிநகரில் வசித்து வருகிறார். இவரது மனைவி கீதா(26). இந்த தம்பதிக்கு 3 வயதில் ராகவன் என்ற மகன் இருந்தான்.

சிறுவன் கடந்த 19–ந்தேதி மாலை வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தான். திடீரென அவன் காணாமல் போய்விட்டான். இதனால் கலக்கம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால் ராகவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடிவந்தனர்.

பிணமாக மீட்பு

இந்தநிலையில் ராகவன் காணாமல் போய் 3 நாட்கள் ஆன நிலையில், நேற்று அங்குள்ள சாக்கடைக்குள் சிறுவன் ஒருவன் பிணமாக கிடப்பது தெரியவந்தது. உடனடியாக சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதில், பிணமாக மீட்கப்பட்டது காணாமல் போன சிறுவன் ராகவன் என்பது தெரியவந்தது. அவனது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவன் விளையாடி கொண்டிருக்கும் போது, சாக்கடைக்குள் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story