சீசன் இல்லாதபோதும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழுகிறது
சீசன் இல்லாதபோதும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழுகிறது. அய்யப்ப பக்தர்கள் உற்சாகத்துடன் அருவிகளில் குளித்து செல்கிறார்கள்.
தென்காசி,
நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சீசன் காலமான ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான காலகட்டத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அப்போது மிதமான வெப்பம், லேசான தூறல் என்று இதமான காலநிலை நிலவும். அந்த காலகட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து உற்சாகமாக குளித்து செல்வார்கள்.
தற்போது சீசன் முடிந்த பிறகும் குற்றாலம் அருவிகளில் அவ்வப்போது சுமாராக தண்ணீர் விழுகிறது. நேற்றும் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் சுமாராக விழுந்தது.
அருவிகளில் தண்ணீர் குறைவாகவே விழுந்தாலும் நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தற்போது மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு இருப்பதால் தினமும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் அங்கு சென்று வருகிறார்கள். அவர்கள் வழியில் குற்றாலம் அருவியில் உற்சாகமாக குளித்து செல்கிறார்கள்.
அருவியில் குறைவான தண்ணீரே விழுந்ததாலும், சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குவிந்ததாலும் நெருக்கடியில் நின்று குளித்து சென்றனர்.

Related Tags :
Next Story