கடையம் யூனியன் அலுவலகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் மனு

கடையம் யூனியன் அலுவலகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் மனு
x
தினத்தந்தி 1 Jan 2018 4:15 AM IST (Updated: 1 Jan 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

பொட்டல்புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பக்கிரி மூப்பன் குடியிருப்பு பகுதியை முதலியார்பட்டியுடன் இணைக்ககோரி கடையம் யூனியன் அலுவலகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கடையம்,

பொட்டல்புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பக்கிரி மூப்பன் குடியிருப்பு பகுதியை முதலியார்பட்டியுடன் இணைக்ககோரி கடையம் யூனியன் அலுவலகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், கடையம் யூனியன் பொட்டல்புதூர் பஞ்சாயத்தில் பக்கிரி மூப்பன் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி முதலியார்பட்டி கிராமத்தை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதிக்கு பொட்டல்புதூர் பஞ்சாயத்தில் இருந்து முறையாக எந்த வசதியும் செய்துதரப்படவில்லை. பஞ்சாயத்து அலுவலகம் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் ரே‌ஷன் கடை, சத்துணவுக் கூடம், பள்ளிக்கூடம் என அரசு சம்பந்தப்பட்ட அனைத்து வி‌ஷயங்களுக்காகவும் 2 கிலோமீட்டர் தூரம் அலையவேண்டியுள்ளது. மேலும் குடிநீர், சாலை, மின்விளக்கு, வாறுகால் உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. ஆனால் அருகில் உள்ள தெருக்களுக்கு முதலியார்பட்டி பஞ்சாயத்தில் இருந்து அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் எங்கள் பகுதியையும் முதலியார்பட்டி பஞ்சாயத்துடன் இணைத்தால் நாங்களும் அனைத்து வசதிகளையும் பெற முடியும். அதற்காக பக்கிரிமூப்பன் குடியிருப்பு பகுதியை முதலியார்பட்டி பஞ்சாயத்துடன் இணைக்க வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்புச்செயலாளர் அப்துல்காதர் தலைமையில் கடையம் ஒன்றிய செயலாளர் காதர் மைதீன் மற்றும் ஊர் மக்களும் உடன் சென்றனர்.

Next Story