நின்ற லாரி மீது கார் மோதி விபத்து: கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி பலி


நின்ற லாரி மீது கார் மோதி விபத்து: கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி பலி
x
தினத்தந்தி 2 Jan 2018 3:00 AM IST (Updated: 2 Jan 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே அரியலூரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 38). இவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகாரியாக வேலைபார்த்து வந்தார்.

மேலூர்,

திருச்சி அருகே அரியலூரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 38). இவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகாரியாக வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று அரியலூருக்கு காரில் சென்றார். காரை அவரே ஓட்டினார். மேலூர் அருகே திருச்சி நான்குவழி சாலையில் நாவினிப்பட்டி விலக்கு என்ற இடத்தில் கார் வந்தபோது நிலைதடுமாறி சாலையில் நின்ற லாரி மீது மோதியது. இதில் காரை ஓட்டிவந்த மணிகண்டன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story