பொள்ளாச்சி அருகே லாரி மீது கார் மோதியது: டிரைவர் சாவு


பொள்ளாச்சி அருகே லாரி மீது கார் மோதியது: டிரைவர் சாவு
x
தினத்தந்தி 3 Jan 2018 3:00 AM IST (Updated: 3 Jan 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே லாரி மீது கார் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார். விபத்துக்குள்ளான லாரி மீது மற்றொரு லாரியும் மோதியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி,

மதுரை மாவட்டம் பசும்மலை அருகே முனியாண்டிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் காசிமாயன் (வயது 30). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த ஆஸ்பத்திரியில் நிகழ்ச்சி ஒன்று நடந்து உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கேரள செண்டை மேளம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் நிகழ்ச்சி முடிந்ததும், அவர்களை கேரளா மாநிலம் திருச்சூரில் விடுவதற்கு டிரைவர் காசிமாயன் காரில் அழைத்து சென்றார். இறக்கி விட்டு, விட்டு மீண்டும் மதுரைக்கு அவர் புறப்பட்டார். பொள்ளாச்சி–பாலக்காடு ரோடு ராமபட்டிணம் அருகே வந்த போது, கார் எதிர்பாரதவிதமாக எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் டிரைவர் காசிமாயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் லாரி டிரைவர் தஞ்சாவூர் பாபநாசத்தை சேர்ந்த வெங்கடேசன் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.

இதற்கிடையில் கேரளாவுக்கு அரிசி ஏற்றி சென்ற மற்றொரு லாரி, விபத்தில் சிக்கிய லாரி மீது மோதியது. இதில் அந்த லாரி டிரைவர் கடலூரை சேர்ந்த ராமச்சந்திரன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், ராமச்சந்திரன் மட்டும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து காரணமாக பாலக்காடு ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினார்கள். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story