செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் சாட்சிகளிடம் மறுவிசாரணை செய்யவேண்டும் கோர்ட்டில் மனுதாக்கல்


செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் சாட்சிகளிடம் மறுவிசாரணை செய்யவேண்டும் கோர்ட்டில் மனுதாக்கல்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:30 AM IST (Updated: 3 Jan 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மத்தியசிறையில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் சாட்சிகளிடம் மறுவிசாரணை செய்யக்கோரி ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதி முருகன் மனுதாக்கல் செய்துள்ளார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடைய அறையில் கடந்த மார்ச் மாதம் செல்போன்கள், சிம்கார்டு மற்றும் சார்ஜர் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின் போது முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். இந்த வழக்கில் 7 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21-ந் தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது 2 வார்டன்கள் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு அலீசியா முன்னிலையில் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் வக்கீல் அருண் குமார் ஒரு மனுதாக்கல் செய்தார்.

அதில், ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட சாட்சிகள் 7 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு அலீசியா, வழக்கு விசாரணையை 6-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதைத்தொடர்ந்து முருகன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

Next Story