கர்நாடக மாநில மனித உரிமை ஆணைய தலைவராக ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.எச்.வகேலா நியமனம்
கர்நாடக மாநில மனித உரிமை ஆணைய தலைவராக ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.எச்.வகேலா நியமிக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக மாநில மனித உரிமை ஆணைய தலைவராக ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.எச்.வகேலா நியமிக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா கூறினார்.
உயர்மட்ட குழு கூட்டம்கர்நாடக மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருந்து வந்தது. ஆணைய தலைவரை நியமிக்க கோரி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.
இதில் சபாநாயகர் கே.பி.கோலிவாட், மேலவை தலைவர் சங்கரமூர்த்தி, மந்திரி ஜெயச்சந்திரா, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மனித உரிமை ஆணைய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரின் கருத்தையும் சித்தராமையா கேட்டு அறிந்தார்.
ஒருமனதாக தீர்மானம்இந்த கூட்டத்தில் ஓய்வு பெற்ற கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவை மாநில மனித உரிமை ஆணைய தலைவராக நியமிப்பது என்ற ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிந்த பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ஓய்வுபெற்ற கர்நாடக ஐகோ£ட்டு தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவை கர்நாடக மாநில மனித உரிமை ஆணைய தலைவராக நியமிக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.
மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினராக உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசனை ஆணைய தலைவராக நியமிக்க கர்நாடக அரசு சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்தது. தமிழரான அவரை அந்த பதவிக்கு நியமிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து அந்த முடிவை மாநில அரசு வாபஸ் பெற்றது. இப்போது ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டி.எச்.வகேலா குஜராத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.