வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல் செய்ய முயற்சி
மன்னார்குடி அருகே பாலையூர் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல் செய்ய முயன்றனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
மன்னார்குடி,
மன்னார்குடி அருகே உள்ள சாந்தமாணிக்கம், மரவாக்காடு, கீழநத்தம், இடையர்நத்தம், வல்லான்குடிகாடு, பழம் பேட்டைநத்தம், கண்ணாரபேட்டை, துளசேந்திரபுரம், பைங்காநாடு, ராதாநரசிம்மபுரம், வல்லூர், தென்பரை உள்ளிட்ட கிராமங்களுக்கு பாசனம் பெறும் வடவாறு பிரிவு பாலையூர் கிளை வாய்க்காலில் கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வாய்க்காலை தூர்வாரி உடனடியாக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருமக்கோட்டை சாலையில் பைங்காநாடு-துளசேந்திரபும் சந்திப்பில் நேற்று சாலைமறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று சாலை மறியல் செய்ய பைங்காநாடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் தலைமையில் விவசாயிகள் திருமக்கோட்டை சாலையில் திரண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பொதுப்பணிதுறை அதிகாரிகள் சாலை மறியல் செய்ய முயன்ற விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அங்கு இருந்து விவசாயிகள் கலைந்துசென்றனர். அதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story