டாக்டர்கள் வேலை நிறுத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்டத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
கரூர்,
மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்திய மருத்துவ சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதைக்கண்டித்து, நேற்று ஒருநாள் கருப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என மருத்துவ சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கரூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு களில் மட்டும் மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகம் முன்பு போராட்டம் தொடர்பாக பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
ஆர்ப்பாட்டம்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கத்தினர் நேற்று காலை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்தனர். கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை டாக்டர்கள் பணியை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நந்தகுமார் முன்னிலை வகித்தார்.
மசோதாவை திரும்ப பெறுதல்
போராட்டம் குறித்து டாக்டர் நந்தகுமார் கூறுகையில், “மத்திய அரசு கொண்டு வர உள்ள ஆணையம் மருத்துவ சேவையை வணிக மயமாக்கும் நோக்கில் அமைக்கப்பட உள்ளது. சித்தா, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்பு படித்தவர்கள் மேலும் 6 மாத காலம் அலோபதி மருத்துவத்திற்கான படிப்பு படித்தால் அலோபதி சிகிச்சை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ சிகிச்சையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். இதனால் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த புதிய மசோதாவை திரும்ப பெற வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். 60-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனையில் 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்” என்றார்.
நோயாளிகள் பாதிப்பு
டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் தனியார் மருத்துவமனைகளில் இதர நோய்களுக்காக சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர். அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் ஒரு மணி நேரம் டாக்டர்கள் பணியை புறக்கணித்ததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு வரும் வரை ஒரு மணி நேரம் நோயாளிகள் காத்திருந்தனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் அரசு டாக்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற டாக்டர்கள் பலர் கருப்பு சட்டையும், கருப்பு பட்டையும் அணிந்திருந்தனர். மாவட்டத்தின்பிற பகுதிகளில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.

Related Tags :
Next Story