கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவது அரசியல் பண்பற்ற செயல் எச்.ராஜா பேட்டி


கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவது அரசியல் பண்பற்ற செயல் எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 4 Jan 2018 4:30 AM IST (Updated: 4 Jan 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவது அரசியல் பண்பற்ற செயல் என பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

கீரமங்கலம்,

கவர்னர் ஆய்வு செய்வதை சட்டவிரோதம் என்று நினைப்பவர்கள் கோர்ட்டுக்கு தான் போக வேண்டும். கவர்னர் அரசியல் சட்டத்தில் சொல்லி இருப்பதை தான் செய்து கொண்டிருக்கிறார். ஒரு முதல்-அமைச்சரைக் கூட சம்மன் அனுப்பி ராஜ் பவனுக்கு அழைத்து கேள்வி கேட்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது.

4 மாதம் முன்பு கேரளாவில் முதல்-அமைச்சருக்கு சம்மன் அனுப்பி கவர்னர் அழைத்துள்ளார். அதே போல மாவட்டத்தில் நடப்பதை பற்றி அறிந்து கொள்ள கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. கவர்னர் ஆய்வு செய்வதில் தவறு இல்லை.

கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவதை தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும். இது முறையல்ல, அரசியல் பண்பற்ற செயல். இவர்கள் ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் மாநிலத்துக்கு கவர்னர் இருக்கனும் என்பது அரசியல் சட்டத்தில் உள்ளது. அதன்படி தான் கவர்னர் செயல்படுகிறார். ஆர்.கே. நகரில் பணநாயகம் ஜெயித்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு என்பது எரிநட்சத்திரம் போன்றது. அதனால் நாளைக்கு(அதாவது இன்று) என்ன நடக்கிறது என்று பார்ப்போம். தினகரனுக்கு எதிராக நடவடிக்கை இருக்கும் என்று சொல்கிறார்கள். எனக்கு அது பற்றி தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story