பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது


பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2018 4:30 AM IST (Updated: 5 Jan 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பெண் ஒருவர் வயலில் புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மலையர்நத்தம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது20) என்பவர் அந்த பெண்ணை கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதுகுறித்து பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா, சப்-இன்ஸ்பெக்டர் இளந்தென்றல் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் புல் அறுத்து கொண்டிருந்த பெண்ணை விக்னேஷ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

பின்னர் அவர் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசேகர், விக்னேசை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் பாபநாசம் கிளை சிறையில் விக்னேஷ் அடைக்கப்பட்டார். 

Next Story