குட்டி ... சுட்டி...
கம்யூனிசம், கேப்டலிசம்... போன்ற கருத்துகளில் சந்தேகம் இருந்தாலும் சரி, விளக்கம் தேவைப்பட்டாலும் சரி, இந்த சிறுவன் டையலனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
ஏனெனில் முதலாளி, தொழிலாளி, போராளி... என எல்லா தலைப்புகளிலும், இந்த குட்டி பையன் சுட்டியாக பேசுகிறான். எல்லா விஷயங்களையும் படித்து தெரிந்து வைத்திருப்பதுடன், அதை வீடியோவாகவும் எடுத்து தன்னுடைய இணையதளத்தில் பதிவிட்டு வருகிறான். முதலாளிகளிடம், தொழிலாளிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?, தொழிலாளிகளின் கோரிக்கைகளை ஏன் முதலாளிகள் நிராகரிக்கிறார்கள்?, போராட்டம் அவசியமா..? என டையலனின் வீடியோக்கள் ஒவ்வொன்றும், தனிக்கதை சொல்கின்றன. இந்த குட்டி சுட்டியின் கருத்துகளையும், வீடியோக்களையும் ரசிக்க ‘டையலன் கம்யூனிசம்’ என்று யூ–டியூபில் தேடி பாருங்கள். மற்ற சங்கதிகளை இந்த சிறுவனே விடியோ பதிவாக சொல்லி விடுவான்.
Related Tags :
Next Story