பொங்கல் திருநாளை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்
பொங்கல் திருநாளை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்ற தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி,
பொங்கல் திருநாளை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்ற தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதிநிதிகள் கூட்டம்தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தீர்மானங்கள்கூட்டத்தில் பொங்கல் திருநாளில் தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து மாநகர, நகர, கிளை கழகங்கள் தோறும் கட்சி கொடியேற்றியும், இனிப்பு வழங்க வேண்டும். பள்ளி மாணவ–மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கியும், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும்.
விவசாயிகளுக்கு...ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிதியுதவி வழங்குவதோடு, மீனவர்களுக்கு வாக்கிடாக்கி உள்ளிட்ட நவீன கருவிகள் வழங்க வேண்டும். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.வுக்கு உட்பட்ட கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் உள்ள மானாவாரி பயிர்களுக்கு 2016–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. ஆகையால் அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.