பகுதி எந்திர தயாரிப்புக்கு ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும் ஜி.எஸ்.டி கவுன்சில் பொறுப்பாளரிடம் மனு


பகுதி எந்திர தயாரிப்புக்கு ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும் ஜி.எஸ்.டி கவுன்சில் பொறுப்பாளரிடம் மனு
x
தினத்தந்தி 7 Jan 2018 3:30 AM IST (Updated: 7 Jan 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

தீப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்கக்கோரி சாத்தூர், கோவில்பட்டி பகுதி எந்திர உற்பத்தியாளர் சங்கத்தினர் மனு கொடுத்துள்ளனர்.

சாத்தூர்,

சாத்தூர், கோவில்பட்டி பகுதிகளில் 200–க்கும் மேற்பட்ட பகுதி எந்திரத்தினால் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் பிரதான தொழிலாக இது திகழ்ந்து வருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பெற்று வருகின்றனர்.

இதனிடையே பகுதி எந்திரத்தால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டதால் முழுமையாக எந்திரத்தால் இயங்கும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளின் போட்டியை சமாளிக்க முடியாத நிலை உருவானது. இதனால் கதவடைப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த பிரச்சினையை தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின்கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவரது வழிகாட்டுதலின்பேரில் டெல்லி சென்று மத்திய நிதித்துறை மற்றும் ஜி.எஸ்.டி. கவுன்சில் பொறுப்பாளர் ஷிவ்பிரசாத் சுக்லாவை சத்தித்தனர்.

சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் அலெக்ஸ், கோவில்பட்டி நே‌ஷனல் தீப்பெட்டி சங்க செயலாளர் சேது ரத்தினம் மற்றும் சாத்தூர் லட்சுமணன் ஆகியோர், தீப்பெட்டி தொழிற்சாலைகளின் நிலை குறித்து விளக்கினர். ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு கொடுத்தனர். இதுகுறித்து அடுத்துவரும் கவுன்சில் கூட்டத்தில் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story