மேலப்பாளையம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
மேலப்பாளையம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். புதுப்பெண் நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். அவருடைய மனைவி இசக்கி மா
நெல்லை,
மேலப்பாளையம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
புதுப்பெண்நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். அவருடைய மனைவி இசக்கி மாலதி (வயது 26). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று காலையில் இசக்கி மாலதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் பிணமாக தொங்கிய இசக்கி மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உதவி கலெக்டர் விசாரணைஇறந்த இசக்கி மாலதிக்கு திருமணம் முடிந்து 8 மாதங்களே ஆவதால், அவர் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது எதற்காக இறந்தார் என்பது குறித்து அவருடைய கணவர் பால்ராஜ், மாமியார் சரசுவதி ஆகியோரிடம் நெல்லை உதவி கலெக்டர் மைதிலி மேல் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.