சுப்பிரமணிய சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 28 பேர் கைது
சுப்பிரமணிய சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரை வைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியை கண்டித்து திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது அவர்கள் சுப்பிரமணிய சாமியின் உருவ பொம்மையை எரிப்பதற்காக கொண்டு வந்தனர். இதனை கண்ட கண்டோன்மெண்ட் போலீசார் அந்த உருவபொம்மையை அவர்களிடம் இருந்து கைப்பற்றினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சுப்பிரமணிய சாமியின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், காலால் மிதித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 28 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Tags :
Next Story