போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சாலை மறியல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 32 பேர் கைது


போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சாலை மறியல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 32 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2018 4:00 AM IST (Updated: 9 Jan 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று 5–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் திருவாரூர் பஸ் நிலையம் ரவுண்டானா அருகே நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

32 பேர் கைது

போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, பழனிவேல், கந்தசாமி, கலைமணி, நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் இடும்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 32 பேரை கைது செய்தனர்.


Next Story