மேட்டூர் அணை நீர்தேக்க பகுதிகளில் பிடிபடும் சுவைக்க முடியாத மீன்கள் மீனவர்கள் கவலை
மேட்டூர் அணை நீர்தேக்க பகுதிகளில் சதை இல்லாத, முள் கூடாக இருக்கும் மீன்கள் பிடிபடுகின்றன. இந்த வகை மீன்கள் சுவைக்க முடியாத நிலையில் உள்ளதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கொளத்தூர்,
மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதிகளில் மீன் பிடிப்பதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உரிமம் பெற்று உள்ளனர். தமிழகத்தின் தஞ்சை, திருச்சி, நாகை உள்பட 12 டெல்டா மாவட்ட விவசாயிகள் போல், இந்த மீனவர்களின் வாழ்க்கை தரமும் மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்தே அமைகிறது.
கட்லா, ரோகு, மிர்கால் போன்ற சுவை மிகுந்த முதல்தர மீன்களுக்கு பெயர் போன மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதிகளில் தற்போது இவ்வகை மீன்கள் பிடிபடுவது அரிதாகி விட்டது. இந்த வகை மீன்களை சாப்பிடும்போது ருசியாக இருக்கும். சுற்றுலா பயணிகளும் இந்த மீன்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுவதால் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீனவர்கள் நல்ல வருமானம் ஈட்டி வந்தனர்.
சுவைக்க முடியாத மீன்கள்
தற்போது மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடி, சேத்துக்குளி போன்ற பகுதிகளில் திலேப்பி, வாளை, அரஞ்சான் போன்ற இரண்டாம் தர மீன்கள் மட்டுமே பிடிபடுகின்றன. இந்த வகை மீன் சுமார் 200 கிராம் எடை கொண்டதாக உள்ளது. இந்த மீன்களுக்கு மீன் பிரியர்களிடம் நல்ல வரவேற்பு இல்லை. இவற்றை குறைந்த விலைக்கு தான் மீனவர்களால் விற்பனை செய்ய முடிகிறது. இதனால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் பண்ணவாடி நீர்தேக்க பகுதிகளில் வீசப்படும் மீனவர்களின் வலைகளில் பெயர் தெரியாத, இனம் தெரியாத மீன்கள் தற்போது அதிகளவில் பிடிபடுகின்றன. இந்த மீன்களில் சதை இல்லை. முள் கூடாக உள்ளது. இதனால் சாப்பிட இயலாத நிலையில் உள்ளன. இவ்வகை மீன்கள் பிடிபட்டு தண்ணீரில் இல்லாதபோதும் அதிக நேரம் உயிரோடு இருக்கின்றன. வலையில் பிடிபடும் இவ்வகை மீன்களை மீனவர்கள் யாரும் பயன்படுத்துவது இல்லை. அவற்றை காவிரி கரையோரம் வீசி விடுகிறார்கள்.
மேட்டூர் அணையின் மீன்வளம் ஏற்கனவே குறைந்து விட்ட நிலையில் இந்த இனம் தெரியாத புதிய மீன்களால் மேலும் மீன்வளம் குறைந்து விடுமோ என்ற கவலையில் பண்ணவாடி மீனவர்கள் உள்ளனர். இனம் தெரியாத, இந்த மீன்கள் குறித்து மேட்டூர் மீன்வளத்துறையினர் ஆய்வு நடத்த வேண்டும், என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story