மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 6 தொகுதிகளில் 14.88 லட்சம் வாக்காளர்கள்


மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 6 தொகுதிகளில் 14.88 லட்சம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 11 Jan 2018 4:00 AM IST (Updated: 11 Jan 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 14 ஆயிரத்து 75 புதிய வாக்காளர்கள் உள்பட 14 லட்சத்து 88 ஆயிரத்து 494 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்கும் பொருட்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற்றது. இதில், வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் உள்ளிட்ட படிவங்கள் பெறப்பட்டு, வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டது.

இப்பணிகள் நிறைவடைந்து, நேற்று மாவட்ட கலெக்டர் கதிரவன் இறுதி வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டு பேசியதாவது:-

வாக்காளர் பட்டியலில் 14 ஆயிரத்து 75 பேர் புதிய வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்கள் என 25 ஆயிரத்து 573 பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 279 வாக்காளர்கள் திருத்தம் மேற்கொண்டுள்ளனர்.

6 சட்டமன்ற தொகுதிகள்

இதன்படி 6 சட்டமன்ற தொகுதிகளில் ஊத்தங்கரையில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 672 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 9 ஆயிரத்து 220 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினம் 56 பேர் என 2 லட்சத்து 20 ஆயிரத்து 948 வாக்காளர்கள் உள்ளனர்.

பர்கூரில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 635 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 15 ஆயிரத்து 837 வாக்காளர்கள், 3-ம் பாலினம் 12 பேர் என 2 லட்சத்து 31 ஆயிரத்து 484 வாக்காளர்கள் உள்ளனர். கிருஷ்ணகிரியில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 345 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 27 ஆயிரத்து 387 வாக்காளர்கள், 3-ம் பாலினம் 33 பேர் என 2 லட்சத்து 50 ஆயிரத்து 765 வாக்காளர்கள் உள்ளனர். வேப்பனப்பள்ளி தொகுதியில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 154 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 14 ஆயிரத்து 233 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினம் 11 பேர் என 2 லட்சத்து 33 ஆயிரத்து 398 வாக்காளர்கள் உள்ளனர்.

ஓசூர் தொகுதியில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 365 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 53 ஆயிரத்து 336 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினம் 93 பேர் என 3 லட்சத்து 16 ஆயிரத்து 794 வாக்காளர்கள் உள்ளனர். தளி தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 193 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 13 ஆயிரத்து 903 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினம் 9 பேர் என 2 லட்சத்து 35 ஆயிரத்து 105 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 6 தொகுதிகளிலும் 7 லட்சத்து 54 ஆயிரத்து 364 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 33 ஆயிரத்து 916 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலின வாக்காளர்கள் 214 பேர் என மொத்தம் 14 லட்சத்து 88 ஆயிரத்து 494 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

சரிபார்த்து கொள்ளலாம்

இறுதி வாக்காளர் பட்டியலானது பொதுமக்களின் பார்வைக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர்களான ஒசூர் உதவி கலெக்டர், கிருஷ்ணகிரி வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்களிலும் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான அனைத்து தாசில்தார்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் இப்பட்டியலின் நகல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் வாக்காளர்கள் தங்களது பதிவுகள் மற்றும் திருத்தங்களை சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் ஓசூர் சப்-கலெக்டர் சந்திரகலா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அருண், தாசில்தார்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

Next Story