இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 13 தொகுதிகளில் 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்
வேலூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் ராமன் வெளியிட்டார். இதன்படி 13 தொகுதிகளில் 30 லட்சத்து 51 ஆயிரத்து 171 வாக்காளர்கள் உள்ளனர்.
வேலூர்,
இந்திய தேர்தல் ஆணையம் 1-1-2018-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்த வாக்காளர் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அன்று முதல் கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரையில் சுருக்க திருத்தங்களுக்கான படிவங்கள் பெறப்பட்டது.
அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகிய வகைகளில் மொத்தம் 39 ஆயிரத்து 374 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை பரிசீலனை செய்யப்பட்டதில் 36 ஆயிரத்து 637 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து சுருக்க திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ராமன் நேற்று வெளியிட்டார்.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் 30 லட்சத்து 51 ஆயிரத்து 171 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வேலூர் மாவட்டத்தில் உள்ள 1, 627 வாக்குச்சாவடிகளிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிடலாம் என கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், உதவி கலெக்டர் செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தாசில்தார்கள் சச்சிதானந்தம், பாலாஜி மற்றும் அரசியல்கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story