செல்போன் நிறுவன ஊழியர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை 4 பேர் கும்பல் வெறிச்செயல்


செல்போன் நிறுவன ஊழியர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை 4 பேர் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 11 Jan 2018 4:30 AM IST (Updated: 11 Jan 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி அருகே முன்விரோதம் காரணமாக தனியார் செல்போன் நிறுவன ஊழியர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவருடைய உடலை ரோட்டில் வீசிச்சென்ற 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

காட்பாடி,

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பள்ளிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன். புள்ளியியல் துறையில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மகன் உமாசங்கர் (வயது 20). சென்னையில் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பள்ளிகுப்பத்தை சேர்ந்த இவருடைய கூட்டாளிகள் அலெக்ஸ், ஆறுமுகம், ஜெய் என்கிற மெக்கானிக், அன்புராஜேந்திரன்.

உமாசங்கருக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் இடையே கடந்தசில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு அவர்களிடம் இருந்து உமாசங்கர் பிரிந்துவந்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊருக்கு வந்திருந்த உமாசங்கர் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் தனது நண்பர் தினேஷ்குமாருடன் மோட்டார்சைக்கிளில் காட்பாடிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார்சைக்கிள்களில் அலெக்ஸ் உள்பட 4 பேரும் வந்துள்ளனர்.

அவர்கள் உமாசங்கரின் மோட்டார்சைக்கிளை வழிமறித்து நிறுத்தி அங்குள்ள ஏரிப்பகுதிக்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் ஏரியில் வைத்து என்னை கொல்ல ஆள்வைக்கிறாயா என்று கேட்டு இரும்பு கம்பியால் அவரை அடித்துக்கொலைசெய்து, உடலை கிறிஸ்டியான்பேட்டை ரோட்டின் ஓரத்தில் வீசிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் விரைந்து சென்று உமாசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ், ஆறுமுகம், ஜெய் என்கிற மெக்கானிக், அன்புராஜேந்திரன் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.


Next Story