பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை


பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2018 4:00 AM IST (Updated: 12 Jan 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை,

உடுமலை நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் ஆகியவற்றின் பயன்பாடு குறைந்தபாடில்லை. நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஒரு சிலகடைகளில் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிகள் பைகள், டம்ளர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த கடைகளுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர். அப்படி இருந்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைந்தபாடில்லை.

அத்துடன் நகராட்சி பகுதியில் நேரு வீதி உள்ளிட்ட சில இடங்களில் குப்பைகள் சாலையோரம் குவிந்துகிடக்கிறது. இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகளுடன் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்கள் , பிளாஸ்டிக் டம்ளர்கள் போன்றவற்றை பேக்கிங் செய்திருக்கும் பிளாஸ் டிக் பேப்பர்கள் ஆகியவை அதிகளவில் கிடக்கின்றன. இந்த குப்பைகளில் தின்பதற்கு ஏதாவது கிடைக்குமா? என்று அங்கு சுற்றித்திரியும் ஆடுகள் வந்து குப்பை குவியலில் மேய்கின்றன.

இதனால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடுமலை நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story