மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருட்டு: வேலைக்கார பெண்ணுக்கு 7 ஆண்டு ஜெயில் நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருடிய வேலைக்கார பெண்ணுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது.
நெல்லை,
மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருடிய வேலைக்கார பெண்ணுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது.
மூதாட்டியிடம் நகை திருட்டுபாளையங்கோட்டை ரகுமத்நகரை சேர்ந்தவர் ரசிதா பேகம் (வயது 75). வயது முதிர்ச்சியின் காரணமாக அவரால் வீட்டு வேலை செய்ய முடியவில்லை. வீட்டு வேலை செய்வதற்காக தென்காசி அருகே உள்ள நன்னகரத்தை சேர்ந்த முகமது பவுசியா (63) என்பவரை வேலைக்கு வைத்து இருந்தார்.
அவர், வீட்டு வேலைகளையும், ரசிதா பேகத்துக்கு தேவையான பொருட்களையும் வாங்கி கொடுத்து வந்தார். ரசிதா பேகம் வீட்டில் உள்ள நகைகளை எடுத்துவிட வேண்டும் என முகமது பவுசியா திட்டம் போட்டார். அதன்படி கடந்த 6.10.2015 அன்று ரசிதா பேகம் வீட்டில் தனியாக இருந்த போது, அவரை முகமது பவுசியா கட்டிப்போட்டு அடித்து உதைத்தார். பின்னர் அவரை அரிவாளால் வெட்டி, வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றார். இதில் படுகாயம் அடைந்த ரசிதா பேகம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
7 ஆண்டு ஜெயில்இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது பவுசியாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஹேமானந்த்குமார் விசாரித்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில், முகமது பவுசியாவுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது.