கார்-லாரி மோதலில் பலியான 5 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வந்தவாசி அருகே கார்-லாரி மோதலில் பலியான 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கூத்தம்பட்டை சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலு சென்னை கோவிலம்பாக்கத்தில் வசித்து வந்தார். அவர் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் காரில் கூத்தம்பட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் வந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த முருகன் என்பவர் மீது மோதியதில் நிலைதடுமாறிய கார் எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த வேலு (வயது 45), அவரது மனைவி செல்வி (41), மகள் பிரியங்கா (19), உறவினர்கள் லத்தீஷ் குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் காருக்குள்ளேயே பிணமானார்கள்.
அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நேற்று முன்தினம் இரவு வந்தவாசி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே காரில் இடமில்லாததால் மோட்டார்சைக்கிளில் பின்னால் வந்த அவரது மகன் பிரசன்னகுமார், மற்றொரு மகள் காயத்ரி ஆகியோர் விபத்து குறித்து தங்களது உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.
இந்த நிலையில் 5 பேரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இவர்களில் சந்தோஷ்குமார் மற்றும் லத்தீஷ்குமார் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல் வேலு, அவரது மனைவி செல்வி, மகள் பிரியங்கா ஆகியோரது உடல்கள் கூத்தம்பட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. அங்கு இறுதிச்சடங்குகள் நடந்தன.
அப்போது உடல்களை பார்த்து மகள் காயத்ரி மற்றும் மகன் பிரசன்னகுமார் கதறி அழுதனர். எங்களை மட்டும் காப்பாற்றிவிட்டு நீங்கள் சென்று விட்டீர்களே, பொங்கல் பண்டிகையை கொண்டாட வந்தபோது அநியாயமாக போய்விட்டீர்களே என கதறி அழுதது அனைவரின் கண்களையும் குளமாக்கியது. அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் உறவினர்களும் கதறி அழுதனர்.
விபத்தில் பலியான வேலுவின் மகள் பிரியங்கா சென்னையில் உள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். காரை ஓட்டி வந்த டிரைவர் சந்தோஷ்குமார் கோவிலம்பாக்கத்தில் செல்போன் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார். லத்தீஷ்குமார் சென்னை நன்மங்கலத்தில் பெற்றோருடன் வசித்து வந்தார். அவர் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.
இந்த விபத்து நடந்தது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி போலீசாருடன் நள்ளிரவிலேயே புறப்பட்டு 2 மணிக்கு வந்து விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து மேல்விசாரணை நடந்து வருகிறது.

Related Tags :
Next Story