தனியார் நிலத்தில் பதுக்கிய ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
குடியாத்தம் அருகே தனியார் நிலத்தில் பதுக்கிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்து பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் அருகே கோடிகுப்பத்தை அடுத்த கீல்கொல்லப்பல்லி என்ற கிராமத்தில் தனியார் ஒருவரது இடத்தில் சட்டவிரோதமாக குவியல் குவியலாக மணல் பதுக்கி வைக்கப்பட்டு வந்தது. அங்கு இரவு நேரங்களில் எங்கிருந்தோ மணல் அள்ளப்பட்டு வாகனங்கள் மூலம் கொண்டு வந்து குவிக்கப்படுவதாக வேலூர் மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த இடத்துக்கு சென்று மணலை பறிமுதல் செய்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் உதவி கலெக்டர் செல்வராஜ், குடியாத்தம் தாசில்தார் சுமதி, வட்ட வழங்கல் அலுவலர் கலைவாணி, வருவாய் ஆய்வாளர் எத்திராஜ், நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்றபோது பல்வேறு இடங்களில் மலைபோல் மணல் குவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு குவிக்கப்பட்ட 60 யூனிட் மணலை அவர்கள் பறிமுதல் செய்து வாகனங்களில் ஏற்றினர். பின்னர் அவற்றை ஏலம் விடுவதற்காக பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மணலின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
வெளிமாநிலத்துக்கு விற்பனையா?
மணல் அள்ளுவதற்கு விரைவில் நிரந்தர தடைவிதிக்கப்பட்டு எம்சேண்ட் மூலம் கட்டுமான பணிகள் நடக்க உள்ளது. எனவே நிரந்தர தடை வருவதற்குள் இவ்வாறு மணலை கொள்ளையடித்து அவற்றை அருகே உள்ள கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக குவித்தனரா? இதில் யார் யாருக்கு தொடர்புள்ளது? இவற்றை எங்கிருந்து அள்ளிவந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story