ஹஜ் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஹஜ் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2018 4:15 AM IST (Updated: 19 Jan 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

ஹஜ் மானியத்தை ரத்துசெய்த மத்திய அரசை கண்டித்து கூத்தாநல்லூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூத்தாநல்லூர்,

முஸ்லிம்களின் புனித யாத்திரைக்கான ஹஜ் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கூத்தாநல்லூரில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். நகர தலைவர்கள் சாம்பசிவம் (கூத்தாநல்லூர்), மடப்புரம் சம்பத் (திருவாரூர்), மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா, மாவட்ட சமூக ஊடக பிரிவு பொறுப்பாளர் சமீர், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சிகாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹஜ் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்தும், ஹஜ் மானியம் தொடர்ந்து வழங்க கோரியும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன.

இதில் மாவட்ட சிறுபான்மைத்துறை ஒருங்கிணைப் பாளர் பாவாமைதீன், வக்கீல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பதுருதீன்காந்தி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குவளைக்காரர்அலீம், மாவட்ட பொருளாளர் சகாபுதீன், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., பிரிவு துணைத்தலைவர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர சிறுபான்மை பிரிவு தலைவர் ரகமத்துல்லா வரவேற்றார். முடிவில் நகர துணை தலைவர் சக்திவேல் நன்றி கூறினார். 

Next Story