காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஹஜ் மானியம் ரத்து அறிவிப்புக்கு கண்டனம்
ஹஜ் மானியம் ரத்து அறிவிப்பை கண்டித்து கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹஜ் மானியம் ரத்து என மத்திய அரசு அறிவித்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சார்பு அமைப்பு தலைவர்கள் ஜாவித்கான், ஆறுமுகசுப்பிரமணி, நாகராஜ், முபாரக், கோவிந்தராஜ், ராஜேந்திரவர்மா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வின்செண்ட் வரவேற்று பேசினார். இதில் வட்டார தலைவர்கள் பன்னீர்செல்வம், ஷானவாஸ், ராமன், ஜெயவேல், ஜாக்கப், லோகநாதன், டாக்டர் தகி, நகர தலைவர்கள் தவமணி, மாது உள்பட பலர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில், முத்துகுமார் நன்றி கூறினார்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில், ஹஜ் பயணத்திற்கான மானியத்தை தற்போது மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு ரத்து செய்து விட்டதை கண்டித்து, ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் அக்பர் அலி, ஓசூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சூரியகணேஷ், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் மற்றும் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள், சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Related Tags :
Next Story