திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2018 4:15 AM IST (Updated: 19 Jan 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு,

ஹஜ் பயணத்துக்கான மானியத்தை ரத்து செய்ததை கண்டித்தும், மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும் திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அண்ணாசிலை முன்பு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தனகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் வக்கீல் ராஜேஸ்வரன், ஜீவிதா, திருச்செங்கோடு நகரத்தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய அரசை கண்டித்து

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்தும், ஹஜ் பயணத்துக்கான மானியத்தை ரத்து செய்ததை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் அண்ணாமலை, பரமசிவம், கணேசமூர்த்தி, ராஜாமணி, ஜலீல், வசந்தா பழனிசாமி, கிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story