சிறுவனை காரில் கடத்தி கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்த ரவுடி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
திருச்சி சிறுவனை காரில் கடத்தி கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்த ரவுடி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சி,
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த அம்மன்பேட்டையில் இருந்து நாகத்தி செல்லும் சாலையில் வெட்டாற்று வடகரையில் கடந்த 15-ந் தேதி சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். இது பற்றி அறிந்த நடுக்காவேரி போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரித்தபோது, சிறுவனின் தலையில் கட்டையால் தாக்கிய பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. மேலும், அவனது இடது பக்க நெஞ்சில் முத்துக்குமார் என்றும், வலது பக்க நெஞ்சில் சிங்கத்தின் தலையும் பச்சை குத்தப்பட்டு இருந்தது.
உடனே இது பற்றி அனைத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அப்போது திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியை சேர்ந்த ஷேக் இப்ராகிம் மகன் சேக் சலாம்(வயது 17) கடந்த 14-ந் தேதி வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பது தெரியவந்தது. உடனே சிறுவனின் பெற்றோரை போலீசார் அழைத்து சென்று உடலை காட்டினர். அவர்கள் உடலை பார்த்து கொலை செய்யப்பட்டது தனது மகன் தான் என அடையாளம் காட்டினர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அ.தி.மு.க. பிரமுகர் கொலை
இந்த கொலை சம்பவம் குறித்து நடத்திய விசாரணைக்கு பிறகு போலீசார் கூறுகையில் “திருச்சி அரியமங்கலம் திடீர் நகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்மலை பகுதி அ.தி.மு.க. செயலாளர் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சொத்து தகராறு காரணமாக சேகரை அவரது அண்ணன் பெரியசாமியின் மகனும், பிரபல ரவுடியுமான சிலம்பரசன் உள்பட 10 பேர் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் சிலம்பரசன் உள்பட 5 பேருக்கு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சிலம்பரசன் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
3 பேருக்கு வலைவீச்சு
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட சேகரின் மகன் முத்துக்குமாரின் நண்பர் தான் சேக் சலாம். இவர் முத்துக்குமாரின் குடும்பத்துக்கு ஆதரவாக அடிக்கடி பெரியசாமியின் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து சிலம்பரசன் ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது அவருக்கு, முத்துக்குமாருக்கு ஆதரவாக சேக் சலாம் இருந்து வருவதும், பெரியசாமி வீட்டுக்கு சென்று தகராறு செய்ததும் தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சிலம்பரசன், சம்பவத்தன்று சேக் சலாமை நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி சென்று அவரை கட்டையால் தாக்கி கொன்றுவிட்டு உடலை தஞ்சை மாவட்டம் வெட்டாறு வடகரையில் வீசி சென்று இருக்கலாம்” என்று போலீசார் கூறினர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள சிலம்பரசன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கஞ்சா பறிமுதல்-கைது
இதற்கிடையில் சிலம்பரசன் வீட்டை போலீசார் சோதனை செய்த போது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் சிலம்பரசனின் தாயார் மட்டுமே இருந்தார். அவரிடம் விசாரித்த போது கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு சிலம்பரசனின் தாயார் ஜானகி (50) மீதும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story