அரசு தவறு செய்து விட்டு பஸ் கட்டண உயர்வை மக்கள் மீது திணிப்பதா? கனிமொழி எம்.பி. கண்டனம்
அரசு தவறு செய்து விட்டு கட்டண உயர்வை மக்கள் மீது திணிப்பது கண்டனத்துக்குரியது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
கோவை,
அரசு போக்குவரத்து கழகத்தில் நஷ்டம் வருவதற்கு காரணம் தமிழக அரசு ஒழுங்காக வேலை செய்ய வில்லை என்பதை காட்டுகிறது. மேலும் ஆட்சியில் குழப்பம், ஊழல்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரசு தவறு செய்து விட்டு, பஸ் கட்டண உயர்வை மக்கள் மீது திணிப்பது சரியான நடவடிக்கை அல்ல.
சாமானிய மக்களால் இந்த கட்டணத்தை செலுத்த முடியாது. தமிழக அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் ஈடு படுகின்றனர். தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்யப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது கிடையாது.
மருத்துவ மாணவர்கள் மரணம் கவலை அளிக்க கூடியது. இரண்டு மாணவர்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் உடலில் காயம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்து இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மாணவர்களுக்கு உதவ அரசு ‘ஹெல்ப்லைன்’ உருவாக்கி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கோவை விமானநிலையத்தில் கனிமொழி எம்.பி.யை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ, மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி உள்பட பலர் வரவேற்றனர்.

Related Tags :
Next Story