அரசு அலுவலகங்களில் முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்துவேன் கவர்னர் கிரண்பெடி அறிவிப்பு
பொதுமக்களின் புகார்களுக்கு ஏற்ப முன்னறிவிப்பின்றி அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்துவேன் என கவர்னர் கிரண்பெடி கூறினார்.
அரியாங்குப்பம் ,
புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் அரியாங்குப்பத்தில் கண்காணிப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு சார்பில் மகளிருக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகள், ஆதரவற்ற மற்றும் மாணவர்கள் தங்கி படிக்கும் வசதிகள், குற்ற செயலில் ஈடுபடும் இளம் சிறார்களை சீர் திருத்தும் பள்ளி உள்ளிட்டவை கள் இயங்கி வருகின்றன.
இத்துறையில் நேற்று காலை 7 மணியளவில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள வகுப்பறைகள், அடிப்படை வசதிகள், சீர்திருத்தப்பள்ளி, கண்காணிப்பு அலுவலகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்றிந்தார். துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து அங்கிருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது;-
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வு செய்யப்படும் இடங்களை இனி யாரிடமும் முன் கூட்டியே தகவல் தெரிவிக்க மாட்டேன். பொதுமக்களின் புகார்களுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் உத்தரவிடுவேன்.
வாரத்தின் அலுவலக நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து அரசு அலுவலகங்களுக்கு முன்னறிவிப்பும் இல்லாமல் துறை செயலருடன் சென்று ஆய்வு மேற்கொள்வேன். கண்காணிப்பு இல்லத்தில் உள்ள ஊழியர்கள் போதுமான பயிற்சிகள் இல்லாமல் உள்ளனர். அவர்களது திறனை மேம்படுத்துவதற்காக பயிற்சிகளும் அளிக்க இருக்கிறேன்.
நான் யாரையும் தண்டிக்க வரவில்லை. உங்களது திறனை வெளிப்படுத்திட தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவேன். ஒவ்வொரு அலுவலகங்களிலும் மாதம் ஒரு முறை மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே எனது ஆய்வாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வில் சமூக நலத்துறை இயக்குனர் சாரங்கபாணி, கண்காணிப்பு இல்லத்தின் உதவி இயக்குனர் தமிழ்மணி, களஅதிகாரி விஜயலட்சுமி மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story