நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாக புகார்: எங்களை யாரும் சிறைவைக்கவில்லை கூறியதாக தகவல்
நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட டாக்டர் மற்றும் இளம்பெண் ஆகியோர் தங்களை யாரும் கடத்தி சிறைவைக்கவில்லை என்று விசாரணை நடத்த சென்ற போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
வேலூர்,
தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த கார்த்தி (வயது 63), அவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுடய மகனும், டாக்டருமான மனோஜ்குமார் மற்றும் பேத்தி நிவேதா ஆகியோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மதுரையில் நித்யானந்தா நடத்திய பயிற்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் வீடுதிரும்ப வில்லை. இந்த நிலையில் அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து கார்த்தி, அவருடைய மனைவி ஈஸ்வரி ஆகிய இருவரும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்றனர். ஆனால் அவர்களை நித்யானந்தா சீடர்கள் ஆசிரமத்திற்குள் அனுமதிக்கவில்லை. மேலும் மனோஜ்குமாரும், நிவேதாவும் பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் இருப்பதாக கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி, ஈஸ்வரி ஆகிய இருவரும் ஆசிரமத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறைவைக்கவில்லை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடத்தில் கார்த்தி புகார் செய்தார். அதில் தங்கள் மகனையும், பேத்தியையும் ஆசிரமத்தில் அடைத்துவைத்துள்ளனர். அவர்களை மீட்டுத்தரவேண்டும் என்று கூறியிருந்தனர்.
அதன்பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் பெங்களூரு பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்று அங்கிருந்த டாக்டர் மனோஜ்குமார், நிவேதா ஆகியோரை பிடதி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் எங்களை யாரும் கடத்தி வந்தோ, கட்டாயப்படுத்தியோ சிறைவைக்கவில்லை. இந்துமத தர்மத்தில் எங்களை இணைத்துக்கொண்டோம். நாங்கள் இருவரும் மேஜர் என்பதால் எங்கள் வாழ்க்கையை நாங்களே தீர்மானித்து உள்ளோம் என்று கூறி உள்ளனர்.

Related Tags :
Next Story