பஸ் கட்டண உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரசார், நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து நெல்லையில் இளைஞர் காங்கிரசார், நாம் தமிழர் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை,
தமிழக அரசு அண்மையில் பஸ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார். துணை தலைவர் பீட்டர், பொது செயலாளர் ஆசாத் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், சிறுபான்மை பிரிவு மாநில நிர்வாகி அமீர்கான், முன்னாள் மாவட்ட தலைவர் உமாபதிசிவன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் காமராஜ், சிறுபான்மை பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் அந்தோணி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் கள். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தலைவர் சக்தி பிரபாகரன், நிர்வாகிகள் நயினார், அப்துல்மாலிக், குயிலிநாச்சியார், அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மேலப்பாளையம் சந்தை முக்கில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டை தாலுகா குழு உறுப்பினர் மீராஷா தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் பேரின்பராஜ், சுனில் புஷ்பதாஸ், ஈசுவரன், சாகுல் அமீது, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மோகன், மாவட்டக்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story